tamilnadu

img

வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை

இந்தியாவில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கும் தடைவிதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டால் வெங்காயத்தின் விலை கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் சில்லறை வியாபாரிகள் 100 குவிண்டால் வரையும், மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் வரை மட்டுமே கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் விதித்து அறிவித்துள்ளது.
 

;